பாலியல் தொந்தரவு செய்த இயக்குனர்.... கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்!..

மும்பையில் பாலியல் தொந்தரவு செய்த இயக்குனரின் கன்னத்தில் பெண் ஒருவர் அறை விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை ராக்கி சவந்த தனது தோழியான மனிஷா குமாரியுடன் மும்பையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு சசீந்தர சர்மா என்ற இயக்குனர் மனிஷா குமாரியிடம் தவறாக நடக்க முயன்றதால் மேடையிலேயே இயக்குனரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர் சர்மா, மனிஷாவை தாக்கியுள்ளார், மேலும் சர்மாவின் ஆதரவாளர்கள மனிஷாவை தாக்க தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த மனிஷா, இயக்குனர் சர்மா தன்னிடம் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட முயன்றார். அதனால் அவரை நான் தாக்கினேன்.

அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்கை பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment