சமீபத்தில் இணையதள வாட்ஸ் அப் பக்கத்தில் நடிகை வசுந்தரா, காதலனுடன் நெருக்கமாக இருப்பது, டாப்லெஸ் போஸ் தருவது உள்ளிட்ட போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஷாக் ஆன வசுந்தரா இணையதள டுவிட்டர் பக்கத்திலிருந்து விலகியதுடன் இப்படங்கள் போலியாக யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோல் சிக்கலில் சிக்கி இருக்கிறார் ராதிகா ஆப்தே. தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், உலா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பாத்ரூமில் டாப்லெஸ்ஸாக இவர் குளிப்பதுபோன்ற படங்கள் வாட்ஸ்அப் பகுதியில் வெளியாகி உள்ளது. இதெல்லாம் ராதிகாவே எடுத்ததா அல்லது அவரது புகைப்படங்களை யாராவது மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.
இது பற்றி கோலிவுட்டினர் கூறும்போது, ‘நடிகைகள் சமீபகாலமாக சக நண்பர்கள் மட்டுமல்ல ரசிகர்களுடனும் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதி தருகிறார்கள். அந்த தாராள மனப்பான்மை அவர்களுக்கே ஆபத்தாகிவிடுகிறது. ஒரு சில விஷமிகள் அப்படங்களை மார்பிங் செய்து தவறான எண்ணத்துடன் பரப்புகின்றனர். மேலும் பர்சனலாக அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் சேமித்து வைப்பதை யாரோ திருடி வெளியிடுவதற்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. எனவே இதுபோன்ற விஷயங்களில் நடிகைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றனர்.
0 comments:
Post a Comment