இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா கியூ. இசட் 8501விமானம், புறப்பட்ட 42 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. தற்போது விமானம் எங்கே இருக்கிறது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமான கோளாறு காரணமா அல்லது பயங்கரவாதிகள் சதி ஏதும் இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஏர் ஏசியா கியூ இசட் 8501 ( மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ) சுர்பயா விமான நிலையத்தில் இருந்து காலை 6.40 மணியளவில் இந்த விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது தெரிய வந்தது. காலை 7.24 க்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரியன், 1 பிரிட்டன் , 1 மலேசியன், 7 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்தியர்கள் யாரும் இல்லை.
ஏர் ஏசியா கவலை :
இது குறித்து ஏர் ஏசியா பேஸ்புக்கில் , இந்த விமானம் காலை 8. 30க்கு சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. துரதிஷ்டவசமாக 162 பேருடன் கிளம்பிய விமானம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது பெரும் கவலை அளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
எமர்ஜென்ஸி தொலைபேசி எண் :
பயணிகள் நிலை குறித்து அறிந்து கொள் எமர்ஜென்ஸி தொலைபேசி எண்: +622129850801 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாயமாகும் 3 வது விமானம் :
இது 3 வது மாயமாகும் விமானம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய விமானம் எம்.எச்-370 சிங்கப்பூர் புறப்பட்ட போது 239 பயணிகளுடன் மாயமானது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி காணாமல் போன விமானத்தின் ஒரு பாகம் கூட இதுவரை கண்டு பிடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து ஒரு ஏர் ஏசியாவின் எம்.ஹச்.17 விமானம் மாயமானது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஏர் ஏசியா விமானம் மாயமாகி இருக்கிறது. இந்த ஆண்டில், பெரும் பயணிகளுடன் விமானம் மாயமாகும் 3 வது சம்பவம் .
மேலும், தற்போதிய நிலவரப்படி படி, விமானம் வெடித்து கடலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment