மலேசிய விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியுள்ளதாக முன்னாள் பிரெஞ்ச் விமான தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட பிரான்ஸ் விமான நிறுவனமான ப்ரோட்டியஸ் ஏர்லைன்ஸின் (Proteus Airlines) முன்னாள் தலைமை அதிகாரி மார்க் டுகைன் (Mark Dugain) MH 370 பற்றி புதிய தகவலை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மலேசிய விமானம் மத்திய இந்திய பெருங்கடலில் உள்ள தீவான டீகோ கார்சியாவில் (Diego Garcia)உள்ள அமெரிக்க ராணுவ தளம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை அமெரிக்க ராணுவம் தான் சுட்டது.
மலேசிய விமானத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அமெரிக்கா கருதியது. எங்கே ஹேக்கர்கள் விமானத்தை 9/11 பாணியில் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவார்களோ என்ற பீதியில் அமெரிக்கா மலேசிய விமானத்தை தாக்கியுள்ளது.
டீகோ கார்சியா அருகே உள்ள மாலத்தீவில் (Maldives) வசிப்பவர்கள் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாகவும், வடக்கு மாலத்தீவில் உள்ள பாரா தீவு (Baarah island) அருகே விமானத்தில் வைத்திருந்த காலியான தீ அணைக்கும் கருவி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறம் கொண்ட பெரிய விமானத்தை மார்ச் 8ம் திகதி பார்த்ததாக தீவில் உள்ள மீனவர் ஒருவர் கூறியதாக மார்க் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment