விண்வெளியில் 1000 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு! நாசாவின் சாதனை
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய கெப்லர் விண்கலம் மூலம் 1000 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய கெப்லர் என்ற விண்கலத்தில் தொலைநோக்கி மற்றும் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விண்கலம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து, அதை படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது.
தற்போது ‘கெப்லர்’ தொலைநோக்கி 1000க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து கெப்லர் குழு கூறுகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் 8 கிரகங்கள் பூமியை விட 2 மடங்கு சிறியது என்றும் அங்கு உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1000 கிரகங்களில், 554 கிரகங்கள் மட்டும் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரிய குடும்பத்தை தாண்டி வெகு தொலைவில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்களும் கண்டறியப்பட்டு, அவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment