ஜேர்மனியிலும் தீவிரவாத தாக்குதலா?

ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில் பல நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் பிரான்சின் பாரிசில் உள்ள பத்திரிக்கை அலுவலகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் குறைந்தது பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகள் ஆயுதங்களை பெறுவதற்கு இவர்கள் உதவி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜேர்மனியின் பெர்லினிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொலிசார் நடத்திய அதிரடி சோதனைகளில் இஸ்லாமியவாத பிரிவுகளின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிரியாவில் தாக்குதலொன்றை நடத்த திட்டமிட்டுவந்த குழுவொன்றின் தலைவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும் ஜேர்மனிக்குள் தாக்குதல் நடத்த அந்தக் குழு திட்டமிட்டதாக தடயங்கள் இல்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment