பாரிஸ் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரிசில் வெடிகுண்டு மிரட்டலின் காரணமாக அந்நகரின் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிகை அலுவலகத்திற்குள், கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பத்திரிக்கை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள்(Cartoonist) உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பாரிசில் மிக முக்கியமாக கருதப்படும் கிரேடில் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment